பந்து இலங்கையின் கரங்களில் – சீன தூதரக பேச்சாளர்

கடன்நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சீனா மாற்றவேண்டும் என இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கு பந்து இலங்கையின் கரங்களிலேயே உள்ளது என சீனா பதிலளித்துள்ளது.

சீனா தூதரக பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்

சீனா வங்கிகளுடன் கடன் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு உதவுவதற்கு தயார் என மூன்று மாதங்களிற்கு முன்னரே சீனா இலங்கையின் நிதியமைச்சின் அதிகாரிகளிற்கு தெரிவித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா தனது வங்கிகளை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு ஊக்குவித்தது,சீன பிரதமருக்கும் இலங்கையின் முன்னாள் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது சீன நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது எனவும் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நிதியமைச்சிற்கு யோசனைகளை-  அனுப்பினோம் ஆனால் பதில் இல்லை- மேலும் இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முதலில் பூர்த்தி செய்யவேண்டு;ம் என வலியுறுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.