கரையோர ரயில் பாதையில் பலபிட்டிய ரயில் நிலையத்துக்கு முன்பாக மூடப்பட்ட ரயில் கடவையை உடைத்துக்கொண்டு சென்ற முச்சக்கரவண்டியை ரயில் மோதியதால் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்ததாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 40 வயதுடைய பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தவராவார்.
இன்று (17) அதிகாலை 12.30 மணியளவில் கொலன்னாவையிலிருந்து காலி நோக்கி எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.