
அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுதுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொடர்ந்தும் பொலிஸார் ஆர்பாட்டக்காரர்களை களைக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ரணில் அரசாங்கத்துக்கு எதிராகவும், நாட்டில் காணப்படும் நெருக்கடி நிலைமைகளுக்கு உடனடி தீர்வு கோரியும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல பகுதிகளில் இருந்து வருகை தனித்துள்ள மாணவர்கள் மற்றும் பௌத்த தேரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.ஆர்ப்பட்டத்திற்கு ஆதரவுளித்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்
மேலும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது என பொலிஸார் வாசித்து காட்டியபோதிலும் அதனை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.