
பஹ்ரெய்னின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான தேர்தலின் முதல் சுற்று வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. 40 ஆசனங்களுக்கான இத்தேர்தலில் 73 பெண்கள் உட்பட 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால் 19ஆம் திகதி 2ஆவது சுற்று வாக்களிப்பு நடைபெறும்.
எனினும், பஹ்ரெய்னின் பிரதான எதிர்க்கட்சிகளான அல் வேஃபாக் மற்றும் வாத் ஆகியவற்றுக்கு இத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இத்தேர்தலினால் மாற்றம் எதுவும் ஏற்படாது என பிரிட்டனைத் தளமாகக் கொண்ட பஹ்ரெய்ன் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அலி அப்துல் இமாம் விமர்சித்துள்ளார்.