பாகிஸ்தானில் வெள்ளம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,186 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த உயிரிழப்புகள் ஜூன் 14 ஆம் திகதி முதல் பதிவான உயிரிழப்புகளாகும். அதில் கடந்த 20 மணித்தியாலங்களில்  19 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

12 பேர் சிந்து மாகாணத்திலும், 4 பேர் கைபர்  பக்துன்க்வா மகாணத்திலும், 3 பலுசிஸ்தான் மாகாணத்திலும் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் 9  சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.

பாகிஸ்தான் முழுவதும் வெள்ள அனர்த்தம் காரணமாக 256 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் வெள்ளம் நாட்டின் 80 மாவட்டங்களை மோசமாக பாதித்துள்ளது.

ஜூன் 14 முதல், பலுசிஸ்தானில் குறைந்தது 256 பேரும், கேபியில் 268 பேரும், பஞ்சாபில் 188 பேரும், கில்கிட்-பால்டிஸ்தானில் 22 பேரும் உயிரிழந்துள்ளதாக என்டிஎம்ஏ அறிக்கை தெரிவித்துள்ளது.

1 கோடியே 60 ஆயிரம் குழந்தைகள் உட்பட 3 கோடியே 30 இலட்சம் பேர் இந்த ஆண்டு பாக்கிஸ்தானில் கடுமையான மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாக்கிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த பேரழிவுகரமான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் பின்னணியில் பாகிஸ்தான் வெள்ள நிவாரண திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.