20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இன்றைய முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி தமக்கான 20 ஓவர்களில் 4 விக்கட் இழப்புக்கு 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் டெரில் மிச்செய்ல் 53 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தானிய பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.