பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைபொருள் வர்த்தகம்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், டொஃபி மற்றும் சொக்லேட் விற்பனை என்ற போர்வையில், பாடசாலைகளுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்தி வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை டொஃபி மற்றும் சொக்லேட் வடிவில் பாடசாலைகளுக்கு கொண்டு வருவது தெரியவந்துள்ளதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கிய முன்னோடித் திட்டம் இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

“இந்த முன்னோடித் திட்டம் மதிய உணவு, ஆலோசனை மற்றும் பள்ளி மாணவர்களின் தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். கொழும்பு மாநகர சபையும் (CMC) இந்த திட்டத்திற்கு ஒத்துழைக்கும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *