பாண் விலை ஏற்றம் ஏழை மக்களுக்கு ஜீரணிக்க முடியாத நிலை. முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

( வாஸ் கூஞ்ஞ)

இலங்கையில் பொருளாதார சுமையின் காரணமாக பல குடும்பங்கள் நாளாந்தம் உண்ணும் மூன்று நேர உணவை இரண்டு வேளையாக்கி சிறுவர்கள் போஷாக்கு தன்மை குறைந்து காணப்படும் இத்தருணத்தில் பாணின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் ஏழை மக்கள் மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் ஊடக செய்தியில் தெரிவித்துள்ளதாவது

சாதாரண மக்கள் அன்றாட வருமானங்களை இழந்து அரசாங்கத்தின் நிவாராணங்கள் இன்றி வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நேரத்தில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மூன்று வேளை உணவைத் தவிர்த்து இரண்டு வேளை உணவை அரை குறையாக உண்ணும் இந்த நேரத்தில் பாணிண் விலை 300 ரூபாயை தாண்டியமை மேலும் ஏழை மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

பாடசாலை மாணவர்களும் குழந்தைகளும் போசாக்கான உணவு இன்மையால் மந்த போசாக்கு நிலைக்கு நாளாந்தம் தள்ளப்படுகின்றனர் இதனால் மாணவர்களின் குழந்தைகளின் உளவுறன் மற்றும் உடல் நிலை என்பன பாதிக்கப்படுவதுடன் செயல்திறன் வளர்ச்சியும் பாதிக்கப்படகின்றது.

கோதுமை மா மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர் ஏற்றத்தை அடைவதால் சாதாரண அன்றாடம் காச்சிகளின் உணவுத் தேவைகள் பாதிக்கப்படும் இதனால் அரசாங்கம் உடனடியாக கோதுமை மற்றும் பேக்கரி உற்பத்திகளின்  விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *