பாதுகாப்பை அதிகரிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி கோரிக்கை!

வெடிப்பு சம்பவம் ஏற்பட்ட கிரீமியா தீபகற்பத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உள்ள பாலத்தின் பாதுகாப்பு திட்டங்களை அதிகரிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பணித்துள்ளார்.

இது தொடர்பான ஆவணத்தில் அவர் நேற்று கையெழுத்திட்டுள்ளதான சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கிரீமியா தீபகற்பத்தையும் ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதியையும் இணைக்கும் எரிவாயு குழாய் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் காரணமாக எரிபொருள் கொண்டு சென்ற தொடருந்தில் தீ பரவல் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தொடருந்தின் 7 எரிபொருள் தாங்கிகள் வெடித்ததன் காரணமாக பாரியளவில் தீப்பரவல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இதன்போது குறித்த பாலத்தில் பயணித்த மகிழுந்தில் இருந்த மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பாலத்தின் சாலையைக் கடக்கும் பகுதியும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த பாலத்தில் ஒரு வழிப் போக்குவரத்து இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் தற்போது மதிப்பிடப்படுகின்றன.

யுக்ரைனின் தீபகற்பமான கிரீமியா 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. விபத்து இடம்பெற்ற கேச் பாலத்தின் ஊடாக உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்கள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *