பிரபல பொலிவூட் நடிகை வீணா கபூர் படுகொலை : மகனே அடித்துக் கொன்ற கொடூரம்

பொலிவூட்டில் படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் வீணா கபூர் (74). மும்பையில் வசித்து வந்த இவரை சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவில் வீணா கபூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் மூத்த மகன் கடந்த செவ்வாய்கிழமை அன்று வீணா கபூருக்கு பலமுறை தெலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் யாருமே தெலைபேசியை எடுக்கவில்லை. இதையடுத்து உறவினருக்கு தெலைபேசி மூலம் தொடர்புகொண்ட அவர், உடனே வீட்டிற்கு சென்ற பார்க்கும்படி கூறியுள்ளார்.

இதனை அடுத்து உறவினர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது, அங்கு வீணா கபூர் இல்லை. இது குறித்து பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

மும்பையில் வசித்து வரும் வீணா கபூரின் இளைய மகன் சச்சினிடம் பொலிஸார் அவரது தாய் குறித்து விசாரித்துள்ளனர். 42 வயதான சச்சினின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது.

இதனால், அவரிடம் விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தினர். அப்போது, சச்சின் தனது தாயை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தனது தாய் என்று கூட பார்க்காமல் பேட் மூலம் தாயை பலமுறை தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வீணா கபூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொலிஸார்  தீவிர விசாரணை மேற்கொண்டபோது சொத்து தகராறு காரணமாக தனது தாய் வீணா கபூரை கொன்றதாக சச்சின் தெரிவித்தார்.

இந்த சம்பவம் கூறித்து பொலிஸார் கூறியதாவது,

தாயாரின் தலையில் பேஸ்பால் பேட்மூலம் அவர் பலமுறை அடித்துள்ளார். பிறகு யாரிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று, உயிரிழந்த தாயாரின் உடலை அப்புறப்படுத்தியுள்ளார்.

வீட்டில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு காட்டின் அருகிலுள்ள ஆற்றில் வீணா கபூரின் உடலை வீசியுள்ளார். மும்பை ஜூஹு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலிஸார் கூறினர்.

வீணா கபூருக்கு மும்பையில் 12 கோடி ரூபா மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்துள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி சச்சின் கேட்டுள்ளார்.

இதற்கு வீணா கபூர் மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளைய மகன் கொலை செய்து உள்ளார் உயிரிழந்த கபூரின் உடலை பெட்டி ஒன்றில் வைத்துள்ளார்.

பின்பு வீட்டில் வேலை செய்த நபரின் உதவியுடன் காரில் அவரது உடலை எடுத்து காட்டில் வீசியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சச்சின் மற்றும் வீட்டு வேலைக்காரர் சோட்டு மண்டல் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *