
பிரித்தானிய புதிய பிரதமர் எலிசபெத் ட்ரஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய பிரித்தானிய பிரதமராக எலிசபெத் ட்ரஸ் நியமனம் செய்யப்படுவதன் மூலம் தமது நாட்டுடன் தற்போதுள்ள உறவுகள் மேலும் வலுவடையும் என அமெரிக்க ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சவால்களை எதிர்கொள்ள அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.
புதிய பிரதமர் எலிசபெத் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துத் தெரிவித்ததோடு, யுக்ரைன் விடயத்தில் அவர் தமது நாட்டோடு சேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று கூறினார்.