தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான பிரியங்கா உபேந்திரா கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘டிடெக்டிவ் தீக்ஷனா’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் திரிவிக்ரம் ரகு இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘டிடெக்டிவ் தீக்ஷனா’. இதில் கன்னட திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகை திருமதி பிரியங்கா உபேந்திரா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

மனுடஷப்பா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பி ஆர் இசையமைத்திருக்கிறார். துப்பறியும் காவல்துறை அதிகாரியின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை எஸ் டி சி கிரியேஷன்ஸ் மற்றும் ஈவன்ட் லிங்க்ஸ் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜி. முனி பிரசன்னா, ஜி. முனி வெங்கட் சாப்பன் மற்றும் புருஷோத்தம்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

நடிகை பிரியங்கா உபேந்திரா நடிப்பில் ஐம்பதாவது திரைப்படமாக தயாராகும் ‘டிடெக்டிவ் தக்ஷனா’, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா ஆகிய மொழிகளில் தயாராகிறது.

இதனிடையே நடிகை பிரியங்கா உபேந்திரா தமிழில் ‘ராஜா’, ‘ராஜ்ஜியம்’, ‘காதல் சடுகுடு’, ‘ஐஸ்’, ‘ஜனனம்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பதும், இயக்குநரும், நடிகருமான உபேந்திராவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து கலை சேவை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *