பிள்ளையானுடன் இணைந்து செயற்படப் போவதில்லை: வியாழேந்திரன்

பிள்ளையானுடன் இணைந்து செயற்படப் போவதில்லை: வியாழேந்திரன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப் போவதில்லையென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (16.01.2023) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் ஊடக சந்திப்பு மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

 

[MJXOU6 ]

மக்கள் பிரச்சனை

தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் சம்பந்தமான விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பல்வேறுபட்ட கட்சிகள் சுயேட்சை குழுக்கள் மும்முறமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையிலே மக்கள் எதிர்நோக்கி இருக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும்.

நாட்டிலே மக்களுக்கான பல்வேறுபட்ட பிரச்சனைகள் உள்ளது. மக்களுடைய பிரச்சனைக்கு முன்னுரிமை வழங்குவது தான் மிக முக்கியம். இவ்வாறான சூழ்நிலையில் தற்பொழுது உள்ளூராட்சி தேர்தல்லுக்கான ஆயத்த நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

பிள்ளையானுடன் இணைந்து செயற்படப் போவதில்லை: வியாழேந்திரன் | Viyalendrian Taml Makkal Viduthalai Pulikal

அரசியல் கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டும்

 

ஆக்கபூர்வமான அரசியல் கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டும், அந்த யதார்த்த பூர்வமான கட்டமைப்பை தான் நாம் முடிந்த அளவிற்கு கட்டமைத்து கொண்டு வருகின்றோம்.

பொதுவான சில தீர்மானங்களை எடுத்துக் கொண்டு மாகாணத்தில் குறிப்பிட்ட ஒரு சில அரசியல் தலைமைகளின் நிகழ்ச்சி நிரலை அல்லது அவர்களுடைய கருத்தை கொண்டு திணிப்பது என்பது குறிப்பாக நான் சொல்லப் போனால் நல்லிணக்க போர்வை என்று சொல்லிக்கொண்டு, அது சில இடங்களுக்கு சாத்தியப்படலாம்.

அது நல்லிணக்கம் என்ற போர்வையிலே அரசியல் விடயத்தை இங்கு மாகாண மாகாணம் மட்டத்தில் நடைமுறைப்படுத்தி என்ன நடந்துள்ளது என்பது 73 வருடங்களாக நாங்கள் காண்கின்றோம்.

 

பிள்ளையானுடன் இணைந்து செயற்படப் போவதில்லை: வியாழேந்திரன் | Viyalendrian Taml Makkal Viduthalai Pulikal

இந்த மாகாண யதார்த்தை விளங்கிக் கொண்ட அரசியல் கட்சிகளோடு சேர்ந்து தான் பயணிக்க முடியும். நாம் தற்பொழுது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்,

இந்த மாகாணத்தை பற்றிய இந்த மாகாண மக்களின் பிரச்சனைகளை யதார்த்தமாக கையாண்டு இந்த மாகாணத்தில் இன்று மக்களின் இருப்பை பேணக் கூடியதாக அரசியல் கொள்கை கோட்பாடுகள் கூடியவை பற்றி யோசிக்கிறோம்.

இனத்தின் இருப்பு கேள்வி

 

சில கட்சிகள் ஒன்றாக உள்ளனர் பின் பிரிகின்றனர், அரசியல் அதிகாரம் இல்லாததால் சமூகம் பாரிய அழிவை சந்தித்துள்ளது. தற்போதைய தேர்தலுக்கான எமது முடிவை நாம் அறிவிப்போம் எந்த முடிவாக இருந்தாலும் இந்த மாகாணத்திற்குரிய முடிவுகளாக அது இருக்கும் என்பதை நான் தெரிவிக்கிறேன்.

விடயத்தை நாம் வரவேற்கிறோம் அதை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்பின் அதற்கடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னேற்றங்களை நாம் முன்னெடுத்து செல்வோம்.

[எஸ்.வியாழேந்திரன்]

முஸ்லிம்கள் அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் ஒட்டு மொத்தமாக சேர்ந்து வேலை செய்கின்றனர்.

அதை இன்று தமிழ் அரசியல் தலைமைத்துவங்களுக்குள் கட்சிகளுக்குள் அது ஒரு சாபக்கேடு மாற்றி அமைக்கப்படாத வரை இந்த மாகாணத்தில் வட கிழக்கில் நாட்டில் எமது இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகும்,

நான் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக உள்ளேன்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவு

 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிதி ஒதுக்கங்கள் எனக் கூறிய போது நான் அதை முழுமையாக எதிர்த்தவன், அவர்களின் உயிருக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை மாத்திரம் வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்களும் ஒரு புறத்தில் சிந்திக்க வேண்டும்

ஏனென்றால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தேடித் திரிகின்ற உறவுகளே அவர்களும் ஒரு வகையில் காணாமல் ஆக்கப்படுகின்றார்கள்.

பிள்ளையானுடன் இணைந்து செயற்படப் போவதில்லை: வியாழேந்திரன் | Viyalendrian Taml Makkal Viduthalai Pulikal

அவர்களது காலத்தில் அவர்களுக்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான விடயங்களும் இல்லை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிதி இதுதான் என சொல்வதும் பிழை, நிவாரணம் இவ்வளவுதான் என்பதும் பிழையான விடயம்.

அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது என்பது பிழையான விடயம். அவர்களுக்கான ஒரு சரியான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதை தற்போது ஜனாதிபதி அவர்கள் அரசியல்வாதிகள் இடம் கேட்பதற்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உடைய நியாயமான கோரிக்கைக்கு அவர்களிடம் கேட்டு அவர்களின் எதிர்பார்ப்பில் நிறைவேற்றுவது தான் சாலச் சிறந்தது எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *