பீபா தலைவராக ஜியானி இன்பன்டினோ மீண்டும் தெரிவானார்

சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA – பீபா) தலைவராக ஜியானி இன்ஃபன்டினோ மீண்டும் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் நடைபெறும் பீபாவின் 73 ஆவது வருடாந்த மாநாட்டில், பீபா தலைவராக 3 ஆவது தடiவாக இன்ஃபன்டினோ போட்டியின்றி தெரிவானார்.

இதன் மூலம் மேலும் 4 வருடங்களுக்கு – 2027 ஆம் ஆண்டுவரை – அவர் இப்பதவியில் நீடிக்க முடியும்.

52 வயதான ஜியானி இன்ஃபன்டினோ இத்தாலிய பெற்றோரின் மகனாக சுவிட்ஸர்லாந்தில் பிறந்தவர். சட்டத்த்ரணியான இவர் இத்தாலி மற்றும் சுவிட்ஸர்லாந்து பிரஜாவுரிமைகளைக் கொண்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு பிபா தலைவராக முதல் தடiவாக அவர் பதவியேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *