புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன? சில அடிப்படைத் தகவல்கள்
பிரித்தானியாவின் தற்போதைய தலைப்புச் செய்தியாகியுள்ளது புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்.
இந்த புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன என்பதைக் குறித்த சில அடிப்படை விடயங்களை மட்டும் பார்க்கலாம்.
Brexit என்பது என்ன?
அதாவது, முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது பிரித்தானியா. பின்னர், பொருளாதாரம், புலம்பெயர்தல், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு என பல்வேறு காரணங்களால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என பிரித்தானியா முடிவு செய்தது. அப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத்தான் பிரெக்சிட் என்கிறோம். ’Britain’ மற்றும் ‘exit’ என்னும் இரு வார்த்தைகள் இணைந்து உருவான புது வார்த்தையே Brexit.
பிரெக்சிட் ஒப்பந்தத்தால் பிரித்தானியாவில் ஏற்பட்ட பிரச்சினை
2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரித்தானியா.
ஆனால், அதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது பிரித்தானியா. ஒருபக்கம், பிரான்ஸ் தரப்பு படகுகள் எங்கள் கடல் பகுதியில் மீன் பிடிக்கக்கூடது என பிரித்தானியா கூற, அப்படியானால், உங்கள் மீன்கள் முதலான சரக்குகளை எங்கள் துறைமுகம் வழியாக கொண்டு செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்போம் என பிரான்ஸ் கூற, அடிக்கடி இருநாடுகளும் முட்டிக்கொண்டன.
இன்னொருபக்கம், பிரித்தானியா எதிர்பாராத ஒரு பெரிய பிரச்சினையை சந்திக்கவேண்டிவந்தது. அது இவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கும் என பிரித்தானியா தரப்பு நினைத்துப் பார்த்திருக்கும் என்பது கூட சந்தேகமே.
அதாவது, பிரித்தானியாவின் மேப், அல்லது வரைபடத்தைப் பார்க்கும்போது, அதில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகள் இருப்பதைக் காணலாம்.
அதில், இந்த வட அயர்லாந்துக்கும் பிரித்தானியாவின் முக்கிய நிலப்பரப்புக்கும் இடையில், அயர்லாந்துக் குடியரசு என்றொரு பகுதி உள்ளது. ஆக, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கு சரக்குகள் அனுப்பவேண்டுமானால், அவை அயர்லாந்துக் குடியரசு வழியாகத்தான் செல்லவேண்டும்.
பிரச்சினை என்னவென்றால், அயர்லாந்துக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி. ஆகவே, ஐரோப்பிய ஒன்றிய விதிகள் அயர்லாந்துக்கு பொருந்தும். எனவே, எளிதாக பொருட்களை வட அயர்லாந்துக்கு கொண்டுசெல்ல அல்லது அனுப்பமுடியாத ஒரு நிலை ஏற்பட்டது.
குறிப்பாக, மாமிசம் போன்ற பொருட்களை வட அயர்லாந்துக்கு அனுப்புவதில் பெரும் பிரச்சினை இருந்துவருகிறது.
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்
தற்போது, ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் இந்த வட அயர்லாந்து பிரச்சினைக்காகத்தான் புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்துள்ளன. இன்னொரு வகையில் சொன்னால், பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதம் தெரிவித்துள்ளது.
அந்த ஒப்பந்தம், புதிய வட அயர்
அதன்படி, இனி வட அயர்லாந்துக்கு பொருட்கள் கொண்டு செல்வது சற்று எளிதாகும். அயர்லாந்துக் குடியரசுக்கு செல்லும் பொருட்கள், வட அயர்லாந்துக்குச் செல்லும் பொருட்களுக்கென தனித்தனி விதிகள் கொண்டுவரப்பட உள்ளன.
பிரெக்சிட் ஆதரவாளர்கள் இன்னமும் இந்த ஒப்பந்தத்துக்கும் எதிர்ப்புதான் தெரிவிக்கிறார்கள் என்றாலும், அமைச்சர்கள் முதலானோர் இத்திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: PA