( வாஸ் கூஞ்ஞ) 22.09.2022

புத்தளம் – மன்னார் பாதை மற்றும் தலைமன்னார் – தனுஷ்கோடி கப்பல் சேவை திறப்பது தொடர்பாக இந்தியாவுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட இப்போது நிறைவேற்று ஜனாதிபதியாக புரட்சிகர செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில் புத்தளம் – மன்னார் வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவது தங்களுக்கு எளிதான பணியாக இருக்கும்  என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் பி.எம். முஜிபுர் றஹ்மானhல் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரனையை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக் கூட்டம்  புதன்கிழமை  (21.09.2022இ)  தவிசாளர் ஏ.எச். சுபிஹான் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் பி.எம். முஜிபுர் றஹ்மான்  பிரேரணை ஒன்றை  முன்வைத்தார்.

இப்பிரேரணை முசலி  பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவராலும்  ஏகோபித்த ரீதியாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.

இப் பிரேரணையை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் சபையில் முன்வைக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிரேரனையாவது

உலக நாகரிகம்இ பொருளாதார வளர்ச்சிஇ சமூக மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகள்  என்பவற்றுக்கு  பாதைகள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது

அதேபோல்இ ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும்இ சமூக மறுமலர்ச்சிக்கும்இ பொருளாதார மேம்பாட்டிற்கும் சிறந்த பாதைகள் பெரும் பங்காற்றுகின்றன

30 வருடகால யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் பல வீதிகள் சேதமடைந்துள்ளன. இம்மக்களின் மறுமலர்ச்சியும்இ நாட்டின் வளர்ச்சியும்இ பொருளாதார எழுச்சியும் இப்பிரதேசத்தில் பாதைகள் வளர்ந்த பிறகுதான் ஏற்பட்டன. இந்த மறுமலர்ச்சிக்கு ஜனாதிபதியாகிய நீங்களும அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

அதேபோல்இ 2001ல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போதுஇ நீங்கள் மாண்புமிகு பிரதமராக இருந்தீர்கள். அதன்போது புத்தளம் – மன்னார் பாதை மற்றும் தலைமன்னார் – தனுஷ்கோடி கப்பல் சேவை திறப்பது தொடர்பாக இந்தியாவுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டீர்கள்.

இப்போது நீங்கள்  நிறைவேற்று ஜனாதிபதியாக புரட்சிகர செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றீர்கள். எனவேஇ புத்தளம் – மன்னார் வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவது உங்களுக்கு எளிதான பணியாக இருக்கும்.

ஏனெனில் கொரோனா வைரஸைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் நாடு மிகவும் நெருக்கடியான தருணத்தில் உள்ளது.

எனவேஇ நாட்டை பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய  சுமை உங்கள் மீது  சுமத்தப்பட்டுள்ளது.
அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லுகிறீர்கள்.

தற்போது உலகில் உருவாகி வருகின்ற பாதை வலையமைப்பினூடாக இலங்கைத் தீவை உலக நாடுகளுடன் இணைக்கின்ற மாவட்டமாக மன்னார் மாவட்டம் திகழ்கிறது.

இம்மாவட்டம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில்
நாட்டின் அரிசி உற்பத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகிறது.
நாட்டின் மின் உற்பத்தியில் காற்றாலை மின்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
நாட்டின் மீன் உற்பத்தியில் குறிப்பாக உலர் மீன் உற்பத்தியில் பங்களித்தல்.
பனை மரத்தால் உற்பத்தி செய்யப்படும் பல பொருட்கள்.
முக்கிய சுற்றுலா தளங்கள்.
கிறிஸ்தவர்களின் முக்கிய தேவாலயம் மடு தேவாலயம்.
திருக்கேதீஸ்வரம் இந்துக்களின் முக்கிய கோயிலாகும்.
பெருக்கு மரம் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது.
ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட பல கோட்டைகள்.
பண்டைய விலங்குகள் கழுதைகள்இ
பறவைகள் சரணாலயம்.

இவ்வாறு இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மன்னார் மாவட்டத்திற்கான போக்குவரத்து வசதிகள் பாரிய குறைபாடாகவே காணப்படுகின்றது.

எனவே புத்தளம் – மன்னார் வீதியை அபிவிருத்தி செய்வது முக்கியமாக நோக்கப்படுகின்றது. இது மன்னார் மாவட்டத்திற்கு சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்கும். இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கும்.

எனவே இவ்வீதியை அபிவிருத்தி செய்யுமாறு சபை உறுப்பினர்கள் அனைவரும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றனர். இது இலங்கையின் அபிவிருத்திக்கும் சமூக மறுமலர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பை வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்  என முசலி பிரதேச சபை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *