(எம்.எம்.சில்வெஸ்டர்)

நிலத்திற்கடியிலுள்ள புராதன பொருட்களை எடுக்கும் நோக்கில் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த மூன்று பேரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதியன்று  பிற்பகல் வேளையில்,  எதிமல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சிரிபுர பகுதியில் பெக்கோ இயந்திர வாகனம் மூலமாக நிலத்தை  தோண்டி புராதன பொருட்களை எடுப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த எதிமல பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டு அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது, நிலத்தை தோன்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பெக்கே இயந்திர வாகனம் போன்றவற்‍றை பொலிஸார் கைப்பற்றினர்.

இவ்வாறு கைது செய்யபட்டவர்கள் 27,29, 42  ஆகிய வயதுடைய எதிமல, பானம மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்  என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *