
இலங்கை அரசாங்கம் தனக்கான லாபத்தை மிகுந்த தந்திரோபாயத்துடன் செயற்படுத்த முனைகின்றது, தமிழர்கள் மிகக்கவனமாக ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கையாளவேண்டிய தருணம் இது என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம் – புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் போன்ற இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கைக்கு புலம்பெயர் தமிழர்களின் உதவி மிகவும் அதிகமாக தேவைப்படுகின்றது அந்த உதவிகளை பெறும் சுயநல நோக்கில் தந்திரரோபாயய முறையில் காய்களை நகர்த்துகின்றது எனவும் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் பலரின் தடைகள் அல்லது புலம் பெயர் அமைப்புக்கள் மீதான தடைகள் என்பது பெரியளவு தாக்கத்தினை ஏற்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை. இந்த தடைகள் குறிப்பிட்ட நபர்களின் செயற்பாடுகளிலோ அல்லது குறிப்பிட்ட அமைப்புக்களின் செயற்பாடுகளிலோ தடைகளை கொண்டு வரவில்லை. அவர்கள் வழமையான செயற்பாடுகளை தாங்கள் வாழும் நாடுகளில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இன்றுவரை செயற்பட்டு வருகின்றார்கள்.
இலங்கை அரசு தடை விதித்த ஒரு அமைப்பின் தலைவர் ஒருவர் இலங்கையில் எந்தவித சிக்கலும் இன்றி இன்றுவரை நடமாடிக் கொண்டிருப்பதுவும் அனைவரும் அறிந்ததே. அவ்வாறிருக்க தற்போதைய நிழல் அரசாங்கம் தடைகளை நீக்கிவிட்டோம் என்று அறிவித்திருப்பது வேடிக்கையானதொன்றாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கு தற்போது புலம் பெயர் தமிழரின் உதவி மிக அதிகமாக தேவைபடுகின்றது . அந்த உதவிகளை பெறும் ஒரு சுயநலமான நோக்கிலேயே தந்திரமான முறையில் அரசாங்கம் காய்களை நகர்த்தி வருகின்றது. பொருளாதார ரீதியில் நாட்டுக்கு கைகொடுக்க கூடிய வகையில் முதலீடுகளை கொண்டுவர கூடிய இடத்தில் இருக்கின்ற ஒரே காரணத்தால் தான் அரசாங்கம் பேச்சு வார்த்தைக்காக அழைக்கும் நோக்கில் தான் இது பார்க்கப்பட வேண்டும். தமிழர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய காலமாக இந்த காலம் பார்க்கப்பட வேண்டும். உதாரணமாக பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்பட வேண்டும் என்கிற முயற்சிகள் சர்வதேச அரங்கில்
எடுக்கப்பட்டு வந்த சூழலில் இன்று அதே சட்டத்தை பயன்படுத்தி மூவாயிரத்திட்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்ட விடயம் சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும் .
அத்துடன் தனிப்பட்ட ரீதியில் சில புலம் பெயர் அமைப்புக்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை வைத்துக் கொண்டே ரணிலின் நிழல் அரசாங்கம் தமிழர்களின் ஆதரவை பெற்று சுமுகமான உறவு நிலையை உருவாக்கி வருகின்றோம் என பரப்புரை செய்து சர்வதேச நாணய நிதி உதவிகளை பெற்றுக் கொள்ள பரப்புரைகளை மேட்கொள்ளுவார்கள்
ஆக மொத்தத்தில் தனக்கான லாபத்தை அரசாங்கம் மிகுந்த தந்திரத்தோடு செயட்படுத்த முனைகின்றது. தமிழர்கள் மிக கவனாக ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கையாளவேண்டிய தருணம்