பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள துருக்கி சிரிய பகுதிகளில் வசித்துவந்த நான்கு அவுஸ்திரேலியர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பகுதிகளில் வசித்துவந்த 40 அவுஸ்திரேலியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிற்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.
பூகம்பம் தாக்கியவேளை அந்த பகுதியில் காணப்பட்ட நான்கு அவுஸ்திரேலியர்களின் குடும்பத்தவர்கள் உட்பட அந்த பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கு ஆலோசனை வழங்கி வருகின்றோம்,ஆனால் நான்கு பேருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் செனெட்டிற்கு தெரிவித்துள்ளார்.
அவர்களது பாதுகாப்பே எங்களது பிரதான முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.