பெரும் கவலையில் பொதுஜன பெரமுன எம்.பி

 2 மணி நேரம் முன்

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் துரதிஷ்வசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி தமது அணி என்று கூறினால் அது தவறில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

எமக்கு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கப்படுவதில்லை

பெரும் கவலையில் பொதுஜன பெரமுன எம்.பி | We Are Very Unfortunate Podujana Peramuna M P

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு தமக்கு கிடைக்காமையே இதற்கு காரணம். அந்த நிதியை பயன்படுத்தி பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் இருந்தது.

நாங்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே பல்வேறு துரதிஷ்டவசமான சம்பவங்களே நடந்தன. இதனிடையே கோவிட் தொற்று நோய் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

பொருளாதார நிலைமைகள் உட்பட பல காரணங்களால் எமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி எமக்கு கிடைக்காமல் போனது. உண்மையில் நாங்கள் மிகவும் துரதிஷ்டசாலிகள் எனவும் சிந்தக அமல் மாயாதுன்னே மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *