( வாஸ் கூஞ்ஞ) 06.10.2022

பிள்ளைகள் இறைவனால் எமக்கு தரப்பட்ட பெரும் சொத்துக்கள் குடும்ப மற்றும் சமூக சூழலிருந்தே இவர்கள் பாடசாலை வருகின்றமையால் பெற்ரோரே இன்றைய சூழலில் உங்கள் பிள்ளைகளை நீங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் வளர்க்க வேண்டும் என வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரி மேரி றொசாந்தி இவ்வாறு மேலும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (06.10.2022) மன்.வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாசாலையில் நடந்த நிகழ்வில் முதல்வர் அருட்சகோதரி மேரி றொசாந்தி மேலும் தெரிவிக்கையில்

வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலையானது சிறுவர் , முதியோர் , அத்துடன் இன்றைய சிறப்பு நாளான (06.10.2022) ஆசிரியர் தினத்தையும் சிறப்பாக கொண்டாடுகின்றது.

சிறுவர்களை நோக்கும்போது இவர்கள் எமது சொத்துக்கள். இறைவனால் எமக்கு வழங்கப்பட்ட செல்வங்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தில் , சமூகத்தில் , சூழலில் பெற்றுக் கொண்ட அனுபவங்களுடன்தான் பாடசாலை வருகின்றனர்.

இவர்களைத்தான் ஆசிரியர்கள் சிற்பம் செதுக்குவதுபோல் செதுக்கி ஒரு நல்ல பிரஜைகளாக உருவாக்குகின்றார்கள்.

இவர்கள் மட்டில் ஆசிரியர்கள் மிகவும் கவனம் செலுத்தி அவர்களின் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

ஒரு வைத்தியரோ அல்லது வேறு எந்த நிலையிலிருப்பவரோ அவர்களின் நிலைக்கு உருவாக்க முடியாது.

ஆனால் ஒரு ஆசிரியர்தான் ஒரு ஆசிரியரையோ வைத்தியரையோ பொறியியலாரையோ எவரையும் உருவாக்க முடியும் என்பது நாம் அறிவோம்.

இப்படிப்பட்டவர்களான ஆசிரியர்களுக்கு நாம் இன்று விழா எடுக்கின்றோம்.

பிள்ளைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு கூறுவது ஓவ்வொரு ஆசிரியரும் தங்களிடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகளின் பின்னனியில் பல விடயங்கள் மறைந்து காணப்படும் இதை ஒவ்வொரு ஆசிரியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நாம் மாணவர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் ஒரு காலத்தில் பல உயர்ந்த இடத்தில் இருப்பர். அத்துடன் இந்த சமூகத்தில் நல்ல ஒழுக்கமுள்ள பிரஜையாகவும் இருப்பர்.

பெற்ரோரே இன்றைய சூழலில் உங்கள் பிள்ளைகளை நீங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் வளர்க்க வேண்டும்.

குடும்பத்தில் போதை வஸ்து பாவிப்பதை பார்த்து சிறுவர்களும் அந்த நிலைக்கு தற்பொழுது வரும் நிலை உருவாகி விட்டது.

ஆகவே பெற்றோரே உங்கள் வீட்டுச் சூழலை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நிலைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

கல்வியும் ஒழுக்கமும் எமது மாணவர்களின் இரு கண்களாக இருக்க வேண்டும். ஆகவே உங்கள் பேச்சு நடவடிக்கை பிள்ளைகளின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

அத்துடன் வசதிகள் அற்ற நிலையிலும் எமது ஆசிரியர்கள் தங்கள் பணிகளை சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களின் நலன் நோக்கி தங்களை இயன்ற வரை அர்ப்பணித்து செய்லபடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது என இவ் பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரி மேரி றொசாந்தி இவ்வாறு மேலும் தெரிவித்தார்.(60)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *