
(வாஸ் கூஞ்ஞ) 30.08.2022
யுத்தக்காலத்துக்கு முன்பு பேசாலையில் இரு சினிமா தியேட்டர்கள் இயங்கி வந்தபோதும் பின் யுத்த சூழ்நிலையால் அவைகள் இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டன.
தற்பொழுது சுமார் முப்பது வருடங்களுக்குப்பின் கடந்த சனிக்கிழமை (27.08.2022) முதல் பேசாலையில் தியேட்டர் ஒன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் திரை அரங்கில் சினிமா படக்காட்சிகள் மாத்திரம் அல்ல உள்ளுர் கலைஞர்களால் உருவாக்கப்படும் குறும்படங்கள் மற்றும் கலை நிகழ்வுகள் போன்றவற்றுக்கும் இவ் திரை அரங்கு உபயோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் திறப்பு விழாவில் மதம் சார்ந்த தலைவர்கள் , வன்னி பாராளுமன்ற உறுப்பினர் , தினகரன் பிரதம ஆசிரியர் , பொலிஸ் அதிகாரி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.