
‘விழிகள் கலா முற்றும்’ ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடுகை விழா பேசாலையில்
( வாஸ் கூஞ்ஞ) 07.11.2022
மன்னார் பேசாலை ‘விழிகள் கலா முற்றும்’ என்ற அமைப்பு பேசாலை பிரதான வீதியை அழகுபடுத்தும் நோக்குடனும் ‘வான் மழை பெய்து மரஞ் செடி செழித்து பல்லுயிர் வாழனுமே’ என்ற சிந்தனையை முன்னிருத்தி மாபெரும் மரநடுகை நிகழ்வை பேசாலையில் நடாத்தியது.
இவ் அமைப்பின் இயக்குனர் தேசிய கலைஞர் ‘சாஹித்யா’ எஸ்.ஏ.உதயன் தலைமையில் சனிக்கிழமை (05.11.2022) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பேசாலை பங்கு தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் , ‘மெசிடோ’ நிறுவனத்தின் உதவி திட்டமிடல் அதிகாரியும் மன்னார் நகர சபை உறுப்பினருமான சூசை செபஸ்ரியான் ஜான்சன் , மன்னார் விவசாய திணைக்களத்தின் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி மெண்டிஸ் அல்ஜின் குரூஸ் , அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தலைவர் பொறியியலாளர் எம்.எஸ்.ஏ.சுதாகர் , பேசாலை பீச் ஹோட்;டல் உரிமையாளர் பொறியியலாளர் ஏ.றொபட் பீரிஸ் ஆகியோர் உட்பட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மன்னார் தலைமன்னார் பிராதான வீதியான ஏ14 வீதியின் பேசாலை எல்லைக்குட்பட்ட வீதியின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகள் நடுகை செய்தோரின் விருப்பப் பெயரிடப்பட்டு இவ் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.