
( வாஸ் கூஞ்ஞ) 03.09.2022
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்குக்கு கீழ் இயங்கி வரும் முன்பள்ளி சிறார்களின் 2022 ஆம் ஆண்டுக்கான சந்தை சனிக்கிழமை (03.09.2022) பேசாலை நகர் மத்தியில் இடம்பெற்றது.
இவ் பகுதியிலுள்ள மூன்று முன்பள்ளி சிறார்கள் சுமார் இருநூறு பேர் ஒன்றினைந்து இவ் சந்தையை நடர்த்தினர்.
பேசாலை பங்குத் தந்தையும் மன்னார் பிரiஐகள் குழுவின் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஆலோசனைக்கு அமைவாக் முள்பள்ளி ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் இவ் சந்தை சிறார்களால் இடம்பெற்றது.
இவ் சந்தைக்கு பெரும் திரளான மக்கள் வருகை தந்து பொருட்களை வாங்கியதுடன் சிறார்களின் மனதை குளிர்மைப்படுத்திச் சென்றதையும் நோக்கக்கூடியதாக இருந்தது.