
நேற்று (11) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பயணிகள் பேரூந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆனால் தேசிய பேரூந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம் நேற்றைய டீசல் விலை அதிகரிப்பு கட்டண அதிகரிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
மீண்டும் இவ்வாறான டீசல் விலை அதிகரிப்பு ஏற்பட்டால், கட்டண அதிகரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிலோன் வையிட் டீசல் லீற்றரின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 15 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.