
உக்ரேன் தலைநகருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்பாராத விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனிற்கான தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக உக்ரைனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜோ பைடன் உக்ரைனிற்கு புதிய இராணுவ உதவிகளை அறிவித்துள்ளார்
தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின்போது ஜோ பைடன் ரஸ்யாவிற்கு எதிராக தடைகளையும் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற ஆக்கிரமிப்பை நினைவுகூறுவதற்கு உலகம் தயாராகிக்கொண்டிருக்கின்ற நிலையில் நான் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்கும் உக்ரைனின் ஜனநாயகம் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான தளர்ச்சியற்ற உறுதியான ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவும் நான் உக்ரைன் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன் என பைடன் தெரிவித்துள்ளார்.
புட்டின் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தாக்குதலை ஆரம்பித்தவேளை உக்ரைன் பலவீனமாகயிருக்கின்றது மேற்குலகம் பிளவுபட்டுள்ளது என நினைத்தார் எங்களை தோற்கடிக்க முடியும் என கருதினார் ஆனால் அவர் நினைத்தது முற்றிலும் தவறாகிவிட்டது என பைடன் தெரிவித்துள்ளார்.