
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
இங்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் சுமூகமான பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், சீனாவுடன் புதிய பனிப்போர் இருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.
அதேபோன்று, தாய்வான் மீது சீனா படையெடுத்து ஆக்கிரமிக்கும் என்று தான் நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் இரண்டு வல்லரசு நாடுகளும் முதன்முறையாக சந்திக்கின்றன.
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக பாலியில் நடைபெற்ற சந்திப்பின் போது இருவரும், வட கொரியா தொடர்பிலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்தும் விவாதித்தனர்.