
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பிதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புதுகுடியிருப்பு கிராமத்தில் மார்க்லிஸுல் உலமா சபையின் ஏற்பாட்டில் புதுகுடியிருப்பு கோனார் பண்ணை பள்ளிவாசல் நிர்வாகிகள் உதவியுடன் புது குடியிருப்பு கிராமத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற சங்கங்களின் ஒத்துழைப்புடன் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வும் பேரணியும் வெள்ளிக்கிழமை (19.08.2022) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது
அதாவது இவ் போதை பொருள் ஓழிப்பு விழிப்புணர்வு பேரணpயில் யானது பெருந்தொகையான இஸ்லாமிய மக்கள் தங்கள் கைகளில் பதாகளை ஏந்தியவர்களாக கிராமத்தின் ஊடாக சகல வீதிகளிலும் சென்று போதைப்பொருளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியவர்களாக இவ் பேரணி இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
அத்துடன் குதுகலமாக குடித்து மகிழ்வதும் தன்னை மறந்து கஞ்சா இழுப்பதும் புகைவிட்டு திமிர் கொள்வதும் ஐஸ் அடித்து உளறித்திரிவதும் கெத்தான ஆண்மகனின் அடையாளம் அல்ல. போதையை ஒழிப்போம் உயிரைக் காப்போம் என்ற தொனியும் ஒழித்தது இவ் பேரணியில்