மகளிர் றக்பி உலகக் கிண்ணத்தை நியூ ஸிலாந்து வென்றது

மகளிர் றக்பி உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் நியூ ஸிலாந்து அணி சம்பியனாகியது.

நியூ ஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 34-31 புள்ளிகள் விகிதத்தில் இங்கிலாந்து அணியை நியூ ஸிலாந்து வென்றது.

இச்சுற்றுப்போட்டியில் 12 நாடுகள் பங்குபற்றின. இன்றைய இறுதிப் போட்டியை சுமார் 40,000 பேர் நேரில் பார்வையிட்டனர்,

 

1991 முதல் நடைபெறும் மகளிர் றக்பி உலகக் கிண்ண போட்டிகளில் நியூ ஸிலாந்து 6 ஆவது தடவையாக சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற 3 ஆம் இடத்துக்கான போட்டியில் கனடாவை பிரான்ஸ் அணி 36:0 விகிதத்தில் வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *