(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஏ குழுவில் பங்குபற்றும் மட்டக்களப்பு மைக்ஸ் அணி அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமான 2ஆம் கட்டப் போட்டிகளிலிருந்து மட்டக்களப்பு மைக்கஸ் மற்றும் திருகோணமலை அணிகள் பங்குபற்றிவருகின்றன.மைக்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றதுடன் ட்ரின்கோ அணிக்கு ஏமாற்றமே கிடைத்தது.

40 வயதுக்கு மேற்பட்ட பிரிவல் ஓல்ட் தேவன்ஸ், ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகளை வெற்றிகொண்ட மைக்ஸ் அணி, பலம்வாய்ந்த பொலிஸ் அணியுடன் தோல்வி அடைந்தது.

அம்பலாங்கொடை கூடைப்பபந்தாட்ட சங்க அணிக்கு எதிராக இன்று நபெறவுள்ள போடடியில் மைக்ஸ் அணி வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

எனினும் 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் மைக்ஸ் அணி தனது 2 போட்டிகளில் வெற்றிபெறத் தவறியது.

இதேவேளை, 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் புல்ஸ், க்றிட் அண்ட் க்றைண்ட்  (குழு ஏ), நெட்ஸ் க்றே, ஓல்ட் வெஸ்லிஐட்ஸ் (குழு பி), கொழும்பு கூ.ச., புளூஸ் (குழு சி), விமானப்படை, நெட்ஸ் பின்க் (குழு டி) ஆகிய அணிகள் கால் இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான போட்டிகளும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. நுகேகொடை கூடைப்பந்தாட்ட சங்க அணி, பென்குயின்ஸ் ஆகியன முதல் சுற்று ஆட்டங்களில் இலகுவான வெற்றிகளை ஈட்டிக்கொண்டன.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் கொன்டெண்டர்ஸ் அணியை 22 – 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் நுகோகொடை கூ.ச. அணி வெற்றிகொண்டது.

கோல்டன் ஜென்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 24 – 15 எனற் புள்ளிகள் அடிப்படையில் பென்குயின்ஸ் அணி வெற்றியீட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *