புத்தளம் மாவட்டத்தின் சேராக்குளி மற்றும் கரைத்தீவு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் தமது ஜீவனோபாயமாக கடற் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மண்ணெண்ணையின் விலையேற்றம் காரணமாக தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

மண்ணெண்ணையின் விலையேற்றம் காரணமாக கடந்த மூன்று மாதகாலமாக மீன்பிடித் தொழிலை பலர் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாவும் அதில் ஒரு சிலர் தெப்பத்தில் சென்று மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் மீனவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

முன்னர் இயந்திரப் படகிற்கு 5000 ரூபா கொடுத்து 40 லீற்றர் மண்ணெண்ணையைப் பெற்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டால் சுமார் 10,000 ரூபாவிற்கு அதிகமான வருமானம் வந்ததாகவும் தற்பொழுது 17,000 ரூபா கொடுத்து 40 லீற்றர் மண்ணெண்ணையைப் பெற்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டால் தமக்கு அதே 10,000 ரூபா வருமானம் தான் கிடைப்பதாக மீனவர்கள் அங்கலாய்கின்றனர்.

முன்னர் 2 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரப் படகு தற்பொழுது 6 இலட்சம் ரூபாவிற்கு மேலாக அதிகரித்து உள்ளதாகவும், இயந்திரங்களின் விலைகளும் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாகவும், மீன் பிடி வலைகளின் விலைகளும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கம் மானிய விலையில் தமக்கு மண்ணெண்ணையை வழங்க வேண்டுமென்றும் படகு மற்றும் இயந்திரங்கள் மற்றும் வலைகளின் விலைகளை குறைக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *