
(நெவில் அன்தனி)
பங்களாதேஷின் கொக்ஸ் பஸாரில் நடைபெற்ற மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க மகளிர் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் தோல்வி அடையாத அணியாக இலங்கை சம்பியனானது.
நேபாளத்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2 நேர் செட்களில் வெற்றி பெற்றதன் மூலம் சத்துரிகா மதுஷானி தலைமையிலான இலங்கை அணி சம்பியனானது.
சத்துரிகா மதுஷானியின் ஜோடியாக தீப்பிகா பண்டார விளையாடியிருந்தார்.
முதல் சுற்றுக்கான ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான பங்களாதேஷை 21 – 8, 21 – 5 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிகொண்ட இலங்கை மகளிர் அணி, இரண்டாவது போட்டியில் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் பெயர் பெற்ற உஸ்பெகிஸ்தானை 21 – 11, 21 – 9 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதிப் போட்டியில் மீண்டும் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை மிகத் திறமையாக விளையாடி 21 – 8, 21 – 9 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
இறுதிப் போட்டியில் நேபாளத்தை சந்தித்த இலங்கை 21 – 11, 21 – 11 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றி பெற்று சம்பியனானது.
-
-
சிறப்புக் கட்டுரை
ஆர்ஜென்டினாவின் பொருளாதார நெருக்கடிகளும் உலகக் கிண்ண…
29 DEC, 2022 | 04:19 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜெய்சங்கரை கொழும்புக்கு அழைத்த இலங்கை அரசு
26 DEC, 2022 | 03:18 PM
-
சிறப்புக் கட்டுரை
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளும் ஜே.வி.பி.யும்
22 DEC, 2022 | 07:59 AM
-
சிறப்புக் கட்டுரை
சமூகத்தின் சகல தரப்புகளையும் அரசின் பாதுகாப்பிலும்…
22 DEC, 2022 | 08:00 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழர் தரப்பிடம் எதனை எதிர்பார்க்கிறார் அலி…
23 DEC, 2022 | 03:06 PM
-
சிறப்புக் கட்டுரை
பள்ளத்தில் சரிந்த வாகனத்தை மீட்பதற்கு போராடும்…
19 DEC, 2022 | 05:31 PM
-