இடம்பெயர்ந்து வாழும் மக்கள்  இலகுவாக வந்து செல்லக்கூடிய வீதியை திறக்க வேண்டிய அவசியம்   அமெரிக்க துணை தூதுவரிடம் சுட்டிக்காட்டு

( வாஸ் கூஞ்ஞ) 26.10.2022

புத்தளம் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் பகுதியில் வாக்குப் பதிவை செய்ய முடியாத ஒரு அவலநிலை காணப்படுவதுடன் இவ் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் மாவட்டத்துக்கு இலகுவாக வந்து செல்லக்கூடிய வீதியை திறக்க வேண்டிய அவசியம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க துணைத் தூதுவரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (24.10.2022) அமெரிக்க துணை தூதுவர் டக்ளஸ் ஈ சுனைக் தனது குழுவினருடன் மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அன்றையத் தினம் இவ் குழுவினருடன் அரசியல் பிரதிநிதிகள் ஓரிருவர் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

இவ் சந்திப்பில் மன்னார் சிரேஷ்ட சட்டத்தரனியும் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் , முசலி பிரதேச சபை உறுப்பினர் தஸ்லீமா , மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ரமீஸ்ஷா மற்றும் எழுத்தாளர் அகினம் ஆகியோருடன் இவ் சந்திப்பு இடம்பெற்றது.

இவ் சந்திப்பில் குறிப்பாக மன்னாhலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் மாவட்டத்தில் வாக்குரிமையை பதிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும்

அத்துடன் தங்கள் பகுதிகளுக்கு அங்கிருந்து இங்கு வந்து செல்வதற்கு இலகுவான பிரதான பாதையாக  இலவன்குளம் மன்னார் வீதி காணப்படுவதால் இவற்றை திறப்பதின் முக்கியத்துவம் பற்றி உரையாடப்பட்டதாகவும்

இத்துடன் மன்னார் பகுதியில் கடற்படை மற்றும் இராணுவம் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து வைத்திருப்தையும்

சிலாவத்துறையில் முசலி பிரதேசம் ஒரு முக்கியமான பிரதேசமாக காணப்படுவதால் இவ் பிரதேசம் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அதிகமான மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனவும்

அத்துடன் வடக்கு மாகாணத்தில் மனித உரிமை மீறல்களால் பலர் தடுப்புச் சட்டத்தால் பாதிப்பு அடைந்தவர்களாக இருப்பதாகவும் இவர்களின் உரையாடல்களில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *