( வாஸ் கூஞ்ஞ)

இஞ்சி பயிர் செய்கை ஈரவலயம் மற்றும் இடைவெப்ப வலயங்களில் செய்கைப் பண்ணப்படுகின்றபோதும் இது வெப்பம் கூடிய மன்னார் மாவட்டத்திலும் செய்கைப்பண்ணப்பட்டு சிறந்த பலனை பெறக்கூடியதாக இருக்கின்றது என விவசாய திணைக்கள பூந்கனிவியல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி இருதயநாதன் அர்ஜின் குரூஸ் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் இஞ்சி உற்பத்தி அறுவடை வயல் விழா மன்னார் இரணை இலுப்பைக்குளத்தில் செவ்வாய் கிழமை (04.10.2022) இடம்பெற்றபோது விவசாய திணைக்கள பூந்கனிவியல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி இருதயநாதன் அர்ஜின் குரூஸ் இங்கு மேலும் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் இரணை இலுப்பைக்குளம் விவசாய போதனா ஆசிரியர்; பிரிவில் .45 ஏக்கர் நிலப்பரப்பில் தனிப் பயிராக தூவல் நீர்பாசனத் திட்டத்தில்  விவசாயி ஒருவரால் இஞ்சி பயிர் செய்யப்பட்டு நாம் இதன் அறுவடையை மேற்கொண்டுள்ளோம்.

இஞ்சியானது பண்டை காலம் தொடக்கம் ஒரு வாசைன திரவியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றபோதும் இன்றைய காலக்கட்டத்தில் இத பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

இது பல்வேறு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றபோதும் பெரும்பாலும் சீனர்களாலும் ஆயள்வேத மருத்துவத்துக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இஞ்சி பலதரப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. தூள் இஞ்சி ஊறுகாய் இஞ்சி இனிப்பூட்டிய இஞ்சி என பலதரப்பட்டதாக சந்தைப்படுத்தப்படுகின்றது.

இஞ்சி நாடு பூராகவும் பயிர் செய்யப்பட்டு வருகின்போதும் குறிப்பாக ஈரவலயம் மற்றும் இடைவெப்ப வலயங்களில் செய்கைப் பண்ணப்படுகின்றது.

இவ் இஞ்சி செய்கைப்பண்ணப்படும் பிரதான மாவட்டங்களாக குருநாகல் கண்டி கம்பளை கம்பஹா கேகாலை ஆகியனவாக இருக்கின்றபோதும் தற்பொழுது இது மன்னாரிலும் பயிர் செய்யப்பட்டு இன்று பெருமை அடையக்கூடியதாக இருக்கின்றது.
இது மேல் மாகாணத்தில் அரிதளவாகவே பயிரிடப்பட்டு வருகின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இன வகைகள் பாரியளவில் நம் நாட்டில் செய்கைப் பண்ணப்படுகின்றது.

இஞ்சி அறுவடை காலம் மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் ஏப்பரல் மாதம் ஆரம்பம் வரை மேற்கொள்ளப்படுகின்றது.

இஞ்சி அறுவடைக்கு ஏற்ற காலமாக ஏறக்குறை 8 மாதம் தொடக்கம் 10 மாதங்கள் வரை காணப்படுகின்றன.

இஞ்சி பயிர் செய்கையில் விவசாய திணைக்களத்தின் ஆலோசனையில் ஈடுபடும்போது ஒரு ஹெக்டருக்கு சுமார் 15 தொடக்கம் 18 மெற்றிக் தொன் விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய திணைக்கள பூந்கனிவியல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி இருதயநாதன் அர்ஜின் குரூஸ் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *