( வாஸ் கூஞ்ஞ)
மன்னாரில் இஞ்சி உற்பத்தி அறுவடை வயல் விழா மன்னார் இரணை இலுப்பைக்குளத்தில் செவ்வாய் கிழமை (04.10.2022) இடம்பெற்றது.
இவ் விழாவில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.
இவருடன் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் (விரி) எஸ். ஊதயச்சந்திரன் , மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் க.மகேந்திரன் , மன்னார் மாவட்ட செயலக பிரதான கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இரண இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த எஸ்.டீ.யபீன் என்ற விவசாயி முக்கால் ஏக்கரில் தூவல் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் இவ் இஞ்சி செய்கையை மேற்கொண்டிருந்தார்.
இவ் செய்கைக்கு தூவல் நீர்பாசன உபகரணம் தொகுதி விவசாய திணைக்களம் (விரி) இவ் விவசாயிக்கு வழங்கப்பட்டதுடன் விவசாய திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக இவ் இஞ்சி செய்கையை இவ் விவசாய் தனது செலவிலேயே உற்பத்தி செய்தமையும் குறிப்பிடத்தக்கது..