
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்ட சட்டத்தரனிகள் ஒன்றுக்கூடி மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக மேற்கொண்டு வரும் பணிபகிஷ்கரிப்பு தொடருகின்றபோதும் மன்னார் நீதிமன்றங்களில் இயங்கி வரும் செயல்பாடுகள் வழமைபோன்று இயங்கி வருகின்றன.
மன்னார் மாவட்ட சட்டத்தரனிகள் திங்கள் கிழமை (19.09.2022) ஒன்றுகூடிய மேற்கொண்ட கலந்துரையாடலின்போது தங்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக செவ்வாய் கிழமை (21.09.2022) முதல் வெள்ளிக்கிழமை (23.09.2022) வரை மன்னார் மாவட்ட சட்டத்தரனிகள் மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்களில் வழக்குகளில் முன்னிலையாகாது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தபோதும் இவ் பணி பகிஷ்கரிப்பின்போது மன்னார் நீதிமன்றங்களில் அழைக்கப்படும் வழக்குகள் வழமைபோன்று நடைபெறுகின்றன.
இத் தினங்களில் வெளி மாவட்டங்களிலிருந்து மன்னார் நீதிமன்றங்களுக்கு வரும் சட்டத்தரனிகள் தங்கள் கட்சிகாரர்களுக்காக முன்னிலையாகும் வழக்குகளில் முன்னிலையாகி வருகின்றனர்.
மன்னார் மாவட்ட சட்டத்தரனிகள் சங்கம் தாங்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பு தொடர்பான காரணங்களை சுட்டிக்காட்டி; நீதிசேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் இதன் பிரதிகளையும் இலங்கை சட்டத்தரனிகள் சங்கம் மன்னார் நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுளளதாக எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.