
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்த்தின் மனிதவலு மற்றும் வேலைவாப்பு திணைக்களத்தின் தொழில் நிலையத்தினால் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் மாவட்ட தொழிற் சந்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் தொழிற் சந்தையானது மன்னார் நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் புதன்கிழமை (21.09.2022) முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் தொழிற் சந்தையில் பல தொழில் வழங்கும் நிறுவனங்கள் 150 க்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களுடன் இவ் நிகழ்வு இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.