( வாஸ் கூஞ்ஞ) 12.10.2022
மன்னார் மாவட்டத்தில் பிரதான குளமாகும் விளங்கும் கட:டுக்கரைக் குளத்தின் கீழ் 2022ஃ2023 ஆண்டுக்கான காலபோக விவசாய செய்கையானது வழமைக்கு முன்னதாகவே இவ் விவசாய செய்கை நடப்பு வருடத்தில் செய்கை பண்ணுவதற்கான நீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பிரதான குளமாகும் விளங்கும் கட:டுக்கரைக் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் காலபோக விவசாய செய்கை தொடர்பாக வருடந்தோறும் அரசாங்க அதிபர் தலைமையில் மேற்கொள்ளப்படும் விவசாயக் கூட்டம் 2022ஃ2023 ஆண்டுக்கான காலபோக நெற் செய்கை தொடர்பான கூட்டம் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் உயிலங்குளம் விவசாயிகளின் பொது மண்டபத்தில் 12.10.2022 புதன்கிழமை காலை இடம்பெற்றது.
இவ் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான சகல திணைக்கள அதிகாரிகள் வங்கியாளர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இவ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தற்பொழுது கட்டுக்கரைக்குளத்தில் 08 அடி அதாவது 17200 ஏக்கர் அடி நீர் காணப்படுவதாலும் அத்துடன் இவ் குளத்துக்கு உள்வரத்து வாய்க்காலில் நீர் வருகை 02 அடியாக காணப்படுவதாலும் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் உள்ள அனைத்து பிரதான வாய்க்காள்களின் கீழ் வரும் 31333 ஏக்கர் பரப்புகளிலும் நெற் செய்கை பண்ணுவது என நீர்பாசனப் பொறியியலாளர் சிபாரிசுக்கு அமைவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கட:டுக்கரைக்குளத்தின் கீழ் காலபோக நெற்செய்கையானது காலம் தாழ்த்தி செய்கை பண்ணப்பட்டபோதும் இவ் நடப்பு வருடத்தில் முன்கூட்டியே செய்கைப்பண்ணப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இம்மாதம் ஒக்டோபர் 21 ந் திகதி (21.10.2022) வெள்ளிக்கிழமை கட்டுக்கரைக்குளத்திலிருந்து நீர் திறந்து விடப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.