மன்னார் தீவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.

( வாஸ் கூஞ்ஞ) 23.08.2022

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் கனியவள மணல் அகழ்வால் மன்னார் தீவு விரைவில் அழிவுக்கு உள்ளாகும் அபாய நிலை தோன்றி வருவதால் இவற்றை தடுத்து நிறுத்தும் நோக்குடன் மன்னார் பிரஜைகள் குழுவின் எற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய் கிழமை (23.08.2022) மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் நடைபெற்றக் இவ் கூட்டத்தில் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மதத் தலைர்களும் புத்தி ஜீவிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.