
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் தீவு மக்களுக்கு நிம்மதி பறிபோகிறது . காற்றாடிக் காம்பு கழுத்தை அறுக்கும் அபாயம் தோன்றியுள்ளது இல்மன்னற் மணல் அகழ்வால் மன்னார் தீவு அழியும் அபாயம் தோற்றியுள்ளது என்ற தொணிப்பொருளில் மீண்டும் தலைதூக்கும் இரண்டாம் காற்றாலைத் திட்டத்தையும் மணல் அகழ்வையும் உடன் அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் தீவு மக்கள் இன்று திங்கள் கிழமை (29.08.2022) மாபெரும் கவனயீர்ப்பு போரட்டத்தை நடாத்தினர்.
மன்னார் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னார் பிரiஐகள் குழுவின் எற்பாட்டில் இடம்பெற்ற இவ் கவனயயீர்ப்பு போராட்டமானது திங்கள் கிழமை காலை ஏழு மணி தொடக்கம் மன்னார் தீவிலிருந்து நாலா பக்கங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் அமைப்புக்கள் மற்றும் தென் பகுதியிலிருந்தும் அமைப்புக்கள் மதத் தலைவர்கள் என பலர் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
காலை 11 மணிவரை நடைபெற்ற இவ் போராட்டமானது மன்னார் பஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றதுடன் பல முக்கியஸ்தர்கள் மதத் தலைவர்கள் மன்னார் தீவில் தொடர்ந்து மேற்காள்ளப்பட இருக்கும் மின் உற்பத்திக்கான காற்றாலையாலும் இல்மன்னற் மணல் அகழ்வாலும் மன்னர் தீவுக்கு நடக்கப் போகும் அபாயமும் தற்பொழுது மீனவ சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளும் இங்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இவ் போரட்டத்தைத் தொடர்ந்து மக்கள் மன்னார் மாவட்ட செயலகத்துக்குச் சென்று ஜனாதிபதிக்கு மூன்று மொழிகளிலும் மகஜர் கிடைக்கும் வண்ணம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் ஊடாக அனுப்புவதற்காக ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும் இணைந்து இவ் மகஜரை அரச அதிபரிடம் கையளித்தனர்.
இவ் மகஜரில் மன்னார் தீவ மக்கள் சார்பாக மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் . மதம் சார்ந்த பிரதிநிதிகள் . மன்னார் மீனவ சங்கத் தலைவர் . பிரிஜிட் லங்கா நிறைவேற்று பணிப்பாளர் . மன்னார் மாவட்ட மகளீர் ஒன்றிய இணைப்பாளர் . அரசு சார்பற்ற நிறுவன ஒன்றிய தலைவர் . மன்னார் வர்த்தக சங்கத் தலைவர் , மன்னார் வியாபாரிகள் சங்கத் தலைவர் , மன்னார் மாற்றாற்றல் புனர்வாழ்வு இயக்கனர் போன்றோர் இவ் மகஜரில் கையொப்பம் வைத்துள்ளனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டம் மன்னார் நகரில் நடைபெற்றபோதும் இவ் போராட்டம் நிறைவு பெறும் வரைக்கும் மன்னார் தீவிலுள்ள சகல இடங்களிலும் வர்த்தக நிலையங்கள் கடற்தொழில்கள் தனியார் போக்குவரத்து சேவைகள் உட்பட இயல்பு நிலை முடக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.