( வாஸ் கூஞ்ஞ) 12.10.2022

மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு முல்லைத்தீவுக்கும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளருக்கு மன்னாருக்கும் இடம்மாற்றம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய திரு. சரத் சந்திரநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (17ஃ10ஃ2022) அமுலுக்கு வரும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளராக இடமாற்ற பட்டுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வி.கலிஸ்ரன் மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசம் ஒருங்கிணைந்து முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழிலுக்கு துணைபோவதாக கூறி அவரை இடமாற்றம் செய்யக் கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முல்லைத்தீவு கடற்றொழில் அலுவலகத்தின் முன் நடாத்தி வந்த நிலையிலேயே இவ் இடமாற்றம் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *