மன்னார் மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரியாக ஜனாப்.ஆர்.எம்.மனாஸ் நியமனம்

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரியாக மன்னார் மாவட்ட செயலக தகவல் உத்தியோகத்தர் ஜனாப்.ஆர்.எம்.மனாஸ் பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் மாவட்ட ஊடகப்பிரிவின் மேம்பாட்டுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருப்பின் அரச அதிபருடன் கலந்தாலோசித்து அறிக்கையிடவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட ஊடகப்பிரிவில் மாவட்ட செயலக தகவல் உத்தியோகத்தராக கடமையாற்றும் ஜனாப்.ஆர்.எம்.மனாஸ் 01.09.2022 முதல் மறு அறிவித்தல் வரை மன்னார் மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரியாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மாவட்ட ஊடகப்பிரிவின் கடமைகளை நன்கு ஒழுங்கமைத்து செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட ஊடகப்பிரிவின் மேம்பாட்டுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருப்பின் மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபருடன் கலந்தாலோசித்து உடனடியாக தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு அறியத் தரவும் எனவும் வேண்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *