(வாஸ் கூஞ்ஞ)
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப் போவதாக தெரிவித்து வர்த்தகர்கள் கோதுமை மாவை பதுக்கி வைத்து தட்டுப்பாட்டுக்கு வழி சமைத்துள்ளதாக மத்திய மலைநாட்டுப் பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மத்திய மலைநாட்டுப் பகுதி மக்கள் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
அன்மை காலமாக கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டபோதும் கோதுமை மா சில தினங்களாக பெறக்கூடிய நிலை காணப்பட்டதாகவும்
ஆனால் மீண்டும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட இருப்பதாக கேள்விப் பட்டதும் தற்பொழுது இப்பகுதிகளில் கோதுமை மாவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப் பகுதி வர்த்தகர்கள் பதுக்கியுள்ளமையாலேயே இந் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இப் பகுதி மக்கள் பெரும்பாலும் கோதுமை மாவின் உணவையே உண்டு வருவதாகவும் இவ் மா தட்டுப்பாட்டால் இப் பகுதி மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ் வாழ் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்