ந்தோனேஷியாவில் பெண்ணொருவரை மலைப்பாம்பொன்று கொன்று விழுங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அந்த பாம்புக்குள் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

இறப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ஜஹ்ரா என்கிற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக் 23) இறப்பர் தோட்டத்தில் வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு பாம்பு விழுங்கி உயிரிழந்துள்ளார்.

இப்பெண் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அவரை கண்டுபிடிப்பதற்கு பல குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை மறுநாள், வயிறு உப்பிய நிலையில் மலைப்பாம்பொன்றை கிராமவாசிகள் கண்டதை தொடர்ந்து சந்தேகம் எழும்ப, அந்த பாம்பை அவர்கள் கொன்று, அதன் உடலை வெட்டிப் பார்த்துள்ளனர்.

அப்போது காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த குறித்த பெண்ணின் உடல் அந்த பாம்புக்குள் இருந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி எஸ். ஹரீபா தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் ஆடைகள், பயன்படுத்திய கருவிகளை அவரின் கணவர் கண்டதையடுத்து, பெண்ணை தேடும்படி கோரிக்கை விடுத்த நிலையிலேயே இவ்வாறு பெண் சடலமாக பாம்பின் உடலுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது பெண்ணை விழுங்கிய அந்த பாம்பு 5 மீற்றர் (16 அடி) நீளமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைப்பாம்பினால் மனிதர்கள் கொல்லப்பட்டு விழுங்கப்படுவது இந்தோனேஷியாவில் இது முதல் தடவையல்ல. 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளிலும் அங்கு இத்தகைய இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *