இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி இன்று(2) தனதாக்கிக்கொண்டார்.

பங்களாதேஸ் அணியுடனான இன்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, விராட் கோலி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 1,030 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

பங்களாதேஸ் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இதுவரை, இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன முதலிடத்தில் இருந்தார்.

இவர்மொத்தமாக 1,016 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி மஹேல ஜயவர்தனவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அத்துடன், இந்த தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் 956 ஓட்டங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

மேலும், தற்போது விளையாடி வரும் வீரர்களில் ரோஹித் சர்மா 921 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 781 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 729 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 665 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *