மா சதொசவுக்கு வந்ததும் மக்கள் கொள்முதல் செய்வதில் ஆர்வம்.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் பகுதியில் தற்பொழுது சதொச கிளைகளில் மாவின் விலை குறைக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுவதால் பலர் மாவை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தபோதும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

அன்மைகாலமாக மன்னார் பகுதியில் மா தட்டுப்பாடு நிலவி வந்தபோதும் வெளி சந்தைகளில் ஒரு கிலோ 400 ரூபாவுக்கு மேலாகவே விற்பனை செய்யப்பட்டு வந்ததாக நுகர்வோர் தெரிவித்தனர்.

ஆனால் தற்பொழுது சதொசவுக்கு மா வந்திறங்கியதுடன் ஒரு கிலோ மா 310 ரூபா வீதம் விற்பனை செய்யப்படுவதால் பலர் கியூ வரிசையில் நின்று மாவை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேவேளையில் மன்னார் பகுதி சதொச கிளைகளில் ஒரு நபருக்கு மூன்று கிலோ மா வீதமே வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்மையில் மா விலை அதிகரிக்கப்பட்டபோதும் மன்னார் பகுதியில் ஒரு இறாத்தல் பாண் 200 ரூபாவுக்கே தற்பொழுது தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

ஆனால் பிறிமா மா பேக்கறிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றபோதும் பேக்கறிகளுக்கு போதியளவு மா விநியோகம் செய்யப்படுவதில்லையென பேக்கறி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதும் இவர்கள் வெளிச் சந்தையில் ஒரு கிலோ மா 410 ரூபா தொடக்கம் 420 ரூபா வரைக்கும் வாங்கியே பேக்கறிகளில் பாண் உற்பத்தி செய்து ஒரு இறாத்தல் 200 ரூபாவுக்கே விற்பனை செய்து வருவதாகவும் பேக்கறி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *