
(எம்.எம்.சில்வெஸ்டர்)
தலைமன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான மின்கம்பிகளை தம்வசம் வைத்திருந்த குற்றாட்டில் இளைஞர்கள் இரண்டு பேரை தலை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதியன்று தலைமன்னார் காற்றாலை மின் உற்பத்தில நிலையத்திற்கு சொந்தமான நிலப்பரப்பிலிருந்து 18 இலட்சம் மின் கம்பிகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணையை தலை மன்னார் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தலை மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான இரண்டு மின் கம்பி ரோல்களுடன் பேசாலை பகுதியில் வைத்து குறித்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் 19 மற்றும் 26 வயதுடையவர்களாவர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய (01) மன்னார் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.