மின்சாரத் துறையின் மறுசீரமைப்புக்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவைக்கு கையளிக்கவுள்ளதாக அவர் தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சர் விஜேசேகர உத்தேசித்துள்ளார்.
மின்சாரத்துறை சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பான தேசிய சபை உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர், குழுவின் அறிக்கை தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.