
( வாஸ் கூஞ்ஞ)
மீன் மற்றும் உலர் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதல் அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும் அதைவிடுத்து வெளி;நாட்டு செலாவனியை உள்வாங்குவற்காக தவறான வழியை மன்னாரில் திணிக்க முற்படும் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி டயானா கமகேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னாரை களியாட்டங்களுக்காக பயன்படுத்த முடியும் எதற்காக கருவாடு உலர்த்த வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி டயானா கமகேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அமைச்சர் திருமதி டயானா கமகேவுக்கு; அனுப்பியுள்ள மடலில்
மன்னார் மாவட்டம் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார பின்னனியினை கொண்ட மாவட்டமாகும்.
அபிவிருத்தி என்ற போர்வையில் வெளி;நாட்டு செலாவனியை உள்வாங்குவற்காக தவறான வழியைத் தேர்ந்தெடுப்பது சரியல்ல என்று நான் நினைக்கின்றேன்.
இம் மாவட்ட மக்கள் மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இந்த இரண்டில் இருந்தும் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கின்றனர்.
இந்த மக்களின் முக்கிய வருமான ஆதாரங்கள் இவை. எனவே இந்தத் தொழில்களை குறைத்து மதிப்பிட முடியாது.
மீன் மற்றும் உலர் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதல் அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும்.
உலர் மீன் தயாரிப்பது குறைத்து மதிப்பிட வேண்டிய தொழில் அல்ல. எனவே நீங்கள் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொருந்தாததுமாகும் என இவ்வாறு தனது கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்