
உச்சபட்ச சில்லறை விலையை விடவும், அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த, ஹங்வெல்ல பகுதியில் உள்ள சிறப்பு அங்காடி ஒன்றுக்கு, 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை பிரதான நீதிவான் ஜே.பீ.சமரசிங்க, இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்தமை மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தமை முதலான விடயங்களின் அடிப்படையில், குறித்த சிறப்பு அங்காடிக்கு எதிராக, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த அபராதமானது, இதுவரையில் அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அதிகூடிய தொகையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.